வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (22:37 IST)

பிரேசிலில் பேருந்து கவிழிந்து விபத்து;4 பேர் பலி

Brazil
தென்னமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரேசிலில் அதிபர் லூலா டி சில்வா தலைமையிலான  ஆட்சி   நடந்து வருகிறது.

இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இன்று இந்த நாட்டைச் சேர்ந்த விலா மரியா ஹெலனா கால்பந்து கிளப்பைச் சேர்ந்த அணிகள் கோபா தேசிய போட்டியில் கோப்பை வென்றுவிட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில், ஜூனியர் கால்பந்து அணியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.