திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (22:45 IST)

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 31 பேர் பலி

iran
ஈரான் நாட்டில் பெண்களுக்கு ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதை மீறுபவர்களுக்கு அங்கு சிறைத்தண்டனை கட்டாயம்.இதற்கு எதிராக ஈரான் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது.

ஈரான்  நாட்டில் வசிக்கும் பெண்கள் 7 வயதிற்கு மேல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்,  22 வயது பெண் மாசா அமினி ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.

பின், போலீஸ் காவலில் இருந்த அவர் மர்மமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது சுமார் குர்கிஸ்தான்  உள்ளிட்ட 30 நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. பெண்கள் போராடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  ஈரானில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் 31 பே பலியாகியுள்ளாதாக தகவல் வெளியாகிறது.