Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தானில் கள்ளச்சாராயம் விற்பனை: 30 பேர் பலி!


Sugapriya Prakash| Last Modified புதன், 28 டிசம்பர் 2016 (11:23 IST)
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக தெரிகிறது.

 
 
இந்த சாராயத்தை வாங்கி குடித்த சிலர் திடீரென்று மயங்கி விழுந்தனர். வயிற்று வலி மற்றும் கண்பார்வை கோளாறால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இதில் சுமார் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
அந்நாட்டின் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது கள்ளச் சாராயம் அருந்திய 45 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :