1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2017 (13:58 IST)

பேஸ்புக் மூலம் கருத்தரித்த ஆண்

பிரிட்டனை சேர்ந்த 20வயது ஆண், பேஸ்புக் மூலம் விந்தணு தானம் பெற்று கருத்தரித்துள்ளார். 


 

 
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஹைடன் கிராஸ்(20) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். ஹைடன், தனது பருவ வயதில் தனக்குள் ஏற்பட்ட பாலுணர்வு மாற்றத்தால் ஊசிகள் மூலம் உருவத்தையும், குரலையும் மாற்றிக் கொண்டார்.
 
ஆனால் அவர் இன்னும் முழுவதுமாக மாறவில்லை. அதனால் அவரது உடலில் கருப்பை உள்ளது. இதை உணர்ந்த ஹைடன் தன்க்கென்று ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததன் மூலம் விந்தணு தானம் செய்ய முன்வந்த நபரிடம் விந்தணு பெற்றார். அவரது கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தப்பட்டது. 
 
இதனையடுத்து ஹைடன் வெற்றிகரமாகக் கரு தரித்துள்ளார். இப்போது  ஹைடன் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் ஆகின்றன. இதன்மூலம் பிரிட்டனில் கருத்தரித்த முதல் ஆண் என்ற பெயரைப் பெற்றார்.