புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (15:29 IST)

உக்ரைனில் பொதுமக்கள் 198 பேர் பலி! சுகாதாரத்துறை அறிவிப்பு

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில்     நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கின.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்து. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  உலக நாடுகள் யாரும் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை.

நேற்று உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்ய தரப்பு கூறிய  நிலையில், உக்ரைனும் பேச்சுவார்த்தைகுத்தயார் என தெரிவித்தது.

சர்வதேச நாடுகள் இப்பிரச்சனையைக் கூர்ந்து  கவனித்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 198 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷ்யா கூறியது குறிப்பிடத்தக்கது.