பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த 143 நாடுகள்.. ஐ.நா தீர்மானத்தை கிழித்து போட்ட இஸ்ரேல்!
ஐ.நா சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல காலமாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனம் முழுமையான நாடாக அறிவிக்கப்படுவதற்கு இஸ்ரேல் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறது. தற்போது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் காசாவில் போர் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஐ.நா சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினர் ஆக்குவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
பெருவாரியான ஆதரவு வாக்குகள் வந்ததால் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன் ஐ.நாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலார் எர்டன் அந்த தீர்மானத்தின் நகலை கிழித்து போட்டார். இதனால் ஐ.நா சபையில் பரபரப்பு எழுந்தது.
Edit by Prasanth.K