திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (07:33 IST)

கொரோனா வைரஸால் 1000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை: 50 ஆயிரத்தை நெருங்கும் என அச்சம்

கொரோனா வைரஸால் 1000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்குதல் அம்மாகாணத்தை மட்டுமின்றி சீனா முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. அது மட்டுமன்றி இந்தியா உட்பட உலக நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சீனாவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 160 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை சீனாவில் 1100க்கும் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது 
 
அதுமட்டுமின்றி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றும் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது 
 
மருத்துவர்களின் கணிப்பின்படி சீனாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 50,000 நெருங்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் சீனாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு குறைத்து வெளியிடுகிறது என்றும் உண்மையில் பலி எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.