1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 4 ஜூலை 2015 (02:19 IST)

இலங்கையில்108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்

இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் 108 ஆம்புலன்ஸ் சேவை, இலங்கையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்குப் பயணம் சென்றிருந்த போது சில முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி இலங்கையில் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 
இது குறித்து, ஜிவிகே - இஎம்ஆர்ஐ அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இந்த சேவையைத் தொடங்க இலங்கைக்கு இந்திய அரசு ரூ. 50.81 கோடி நிதி உதவி அளிக்கும்.
 
இதன் முதல்கட்டமாக, இலங்கையின் வட மற்றும் தென் பகுதியில் 108 சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக, மொத்தம் 88 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன்  600 ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 
இலங்கை ஆம்புலன்ஸ் சேவையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் 108 என்ற அதே எண் பயன்படுத்தப்பட உள்ளது என்றனர்.