புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (10:47 IST)

பாகிஸ்தானின் பழமையான ஹிந்து கோவில்… கலவரத்தில் சிதிலமடைந்த வரலாறு

பாகிஸ்தானில் உள்ள பழமையான ஹிந்து கோவில் ஒன்று, 72 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டது.

பாகிஸ்தானின் சியால்கோட் நகரின், தாரோவால் பகுதியில் அமைந்துள்ள ஷாலாவா தேஜா சிங் கோயில், அப்பகுதியில் வாழும் ஹிந்து மக்களின் கோரிக்கையின் பேரில் 72 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. 1947-ல் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, மத கலவரம் மூண்டதால் பாகிஸ்தானிலுள்ள பல ஹிந்துக்கள் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். அந்த சமயத்தில் மூடப்பட்ட இக்கோவில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இன்றும் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டு இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, கொந்தளிப்பில் இருந்த பாகிஸ்தான் மக்கள், அதற்கு எதிர்வினையாக அந்நாட்டிலுள்ள பல ஹிந்து கோயில்களை சேதப்படுத்தினர். அப்போது இந்த ஷவாலா தேஜா சிங் கோவிலும் தாக்கப்பட்டது. தற்போது அதனை சீரமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.

இந்த கோவிலை சீர்படுத்திய பிறகு அப்பகுதியிலுள்ள ஹிந்துக்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்தும் ஹிந்து மக்கள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கோவில் 1000 வருடங்கள் பழமையானது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.