திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (15:27 IST)

எல்லையில் 1 லட்சம் ராணுவ வீரர்கள்; காசா மீது படையெடுக்கும் இஸ்ரேல்!

Gaza war
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில் ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா மீது போரை தொடர்ந்துள்ளது இஸ்ரேல்.



இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் காசாவை கட்டுப்படுத்தி வரும் பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் சுமார் 5000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி பெரும் போரை தொடங்கியுள்ளது.

பதிலடியாக இஸ்ரேலும் வான்வழி தாக்குதலில் இறங்கிய நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. இந்த போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான், சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்களை தருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசா – இஸ்ரேல் எல்லையில் சுமார் 1 லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது இஸ்ரேல். காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியான கர்மியா, அஷ்கிலோன், ட்ரோட் ஆகிய 3 நகரங்களில் ஏற்கனவே ஹமாஸ் – இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் காயம்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K