கால்பந்து மேதை பீலே மரணமடைந்ததாக வதந்தி- மன்னிப்பு கேட்ட சி.என்.என்.

Muthukumar| Last Modified ஞாயிறு, 30 மார்ச் 2014 (12:04 IST)
பிரேசில் கால்பந்து மேதை பீலே மரணம் அடைந்து விட்டதாக ‘சி.என்.என்.’ நிறுவனம் தவறாக செய்தி வெளியிட்டது. அதையடுத்து டுவிட்டர் இணைய தளம் மூலம் அச்செய்தி வதந்தி ஆக பரவியது.
இதற்கு பீலே ஆதரவாளர்கள் கடும் மறுப்பு தெரிவித்தனர்.

அவர் நலமுடன் உயிரோடு இருக்கிறார். அந்த வதந்தியை நம்ப வேண்டாம் என தெரிவித்தனர். அதை தொடர்ந்து தவறாக செய்தி வெளியிட்டதற்காக சி.என்.என். நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

இதற்கிடையே டுவிட்டர் இணைய தளமும் அச்செய்தியை உடனடியாக நீக்கிவிட்டது. மேலும் அது தனது 54 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் தவறுக்காக மறுப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்டது.
பீலே 73 வயதில் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இவர் 77 கோல்கள் அடித்து சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :