வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (08:00 IST)

கனடா மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி – அறிவிப்பை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ!

கனடாவில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வெளிநாட்டில் வாழும் பட்சத்தில் அவர்கள் கனடா வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஒன்று கனடா. அங்கு இதுவரை ஒரு லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் குணமாகியுள்ளனர். மேலும் அந்நாட்டு அரசு அனைத்து மக்களுக்கும் ஊழியத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

நாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டோரின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழும் பட்சத்தில், அவர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்களை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.