புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 25 பிப்ரவரி 2019 (13:57 IST)

முடிந்தது ஆஸ்கர் விழா – முழுமையான விருதுப் பட்டியல் உள்ளே !

91 ஆவது ஆஸ்கர் வழங்கும் விழா கோலாகலமாக சற்று நேரத்திற்கு முன்னர் நடந்து முடிந்தது. அதில் பல்வேறுப் பிரிவுகளின் கீழ் பல படங்களுகுப் பல விருதுகள் வழங்கப்பட்டன.

உலகளவில் வழங்கப்படும் திரை விருதுகளில் ஆஸ்கர் விருது மிகவும் முக்கியமான விருதாக இருந்து வருகிறது. இந்த விருதைப் பெறுவது தங்கள் வாழ்நாள் கௌரவமாக ஹாலிவுட் திரையுலகினர் கருதி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களுக்கு பலப் பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுப் படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியப் பலப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தொடர்ந்து 90 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருது 91 ஆவது ஆண்டாக இன்று வழங்கப்பட்டது. இதில் பல பிரிவுகளின் கீழ் அமெரிக்க மற்றும் உலக நாட்டுத் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இந்தியாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ’பீரியடு: எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ எனும் குறு ஆவணப்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது. இதன் இணைத் தயாரிப்பாளர் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. அது போலவே படத்தின் மையக் கருத்தும் இந்தியாவில் குறைவான விலையில் நாப்கின் தயாரித்து அதைப் பரவலாக்கிய அருணாச்சலம் முருகானந்தம் என்ற தமிழரைப் பற்றியது.

மொத்த ஆஸ்கர் விருது வென்றவர்கள் மற்றும் படங்களின் விவரம்
சிறந்த திரைப்படம் - க்ரீன் புக்
சிறந்த இயக்குனர் – அல்போன்சோ குரான் (ரோமா)
சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மன் (தி ஃபேவரிட்)
சிறந்த நடிகர் - ரமி மலிக் (பொஹிமியன் ராப்சோடி)
சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங், (If Beale Street Could Talk)
சிறந்த துணை நடிகர் – மஹர்ஷாலா அலி (க்ரீன் புக்)
சிறந்த வெளிநாட்டுப் படம் – ரோமா (மெக்சிகோ)
சிறந்த அனிமேஷன் படம் – ஸ்பைடர் மேன் (இன் டு தி ஸ்பைடர் - வெர்ஸ்)
சிறந்த திரைக்கதை - க்ரீன் புக்
சிறந்த தழுவல் திரைக்கதை – பிளாக்லான்ஸ்மேன்
சிறந்த பின்னணி இசை – ப்ளாக் பேந்தர்
சிறந்த பாடல் – ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)
சிறந்த ஆவணப்படம் – ஃப்ரீ சோலோ
சிறந்த குறு ஆவணப்படம் – பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – ஸ்கின்
சிறந்த அனிமேஷன் குறும்படம் – பாவோ
சிறந்த ஒளிப்பதிவு – அல்போன்சோ குரான் (ரோமா)
சிறந்த தயாரிப்பு – ப்ளாக் பேந்தர்
சிறந்த ஆடை வடிவமைப்பு– ப்ளாக் பேந்தர்
சிறந்த ஒப்பனை– வைஸ்
சிறந்த ஒலித் தொகுப்பு– பொஹிமியான் ராப்சோதி
சிறந்த ஒலிக் கலவை– பொஹிமியான் ராப்சோதி
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்
சிறந்த படத்தொகுப்பு – பொஹிமியான் ராப்சோதி