ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (19:29 IST)

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

நடிகர் அஜித் ஐரோப்பிய கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த போட்டிக்கு தயாராக அஜித் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இது குறித்த வீடியோ இன்று காலை இணையத்தில் வைரல் ஆன நிலையில் சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

அஜித் ஒரு பக்கம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் மோட்டார் சைக்கிள் மூலம் உலகம் முழுவதும் சுற்றுவது மற்றும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொள்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஐரோப்பிய கார் ரேஸ் போட்டியில் அஜித் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்த நிலையில் அவர் தற்போது அந்த போட்டிக்காக தயாராகி வருகிறார் என்றும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறிய சுரேஷ் சந்திரா அது குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் சிவப்பு வெள்ளை நிறத்தில் ஆன புதிய வகை ஹெல்மெட்டை அஜித் பயன்படுத்தியதை சுரேஷ் சந்திரா குறிப்பிட்டுள்ள நிலையில் அந்த ஹெல்மெட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva