புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Modified: ஞாயிறு, 3 ஜூன் 2018 (11:14 IST)

தயாரிப்பாளர் மீது மேலும் 3 நடிகைகள் கற்பழிப்பு புகார்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகைகள் பலர் பாலியல் புகார் கூறுவது தொடர்ந்து வரும் நிலையில் தற்பொழுது அவர் மீது மேலும் 3 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட 80க்கும் மேற்பட்ட பல ஹாலிவுட் நடிகைகள்  பாலியல் புகார்களை கூறியுள்ளனர்.  வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள் முதல், பிரபலமான நடிகைகள் பலரும் இவரின் பாலியல் இச்சைக்கு ஆளாகியுள்ளனர்.இதனால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில் ஹார்வி மீது மெலிசா தாம்சன், துலானி, லாரிசா கோம்ஸ் ஆகிய 3 நடிகைகளும் தற்பொழுது கற்பழிப்பு புகார் அளித்துள்ளனர். ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.