1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. மகளிர் தினம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2020 (16:53 IST)

மகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம்!

சர்வதேச மகளிர் தினமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 8 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து  இந்த வருடத்துடன் 105 வருடங்கள் முடிவடைந்து விட்டன.

 
இனம், மொழி, பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பண்களாலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களுக்கு இணையாகப் பண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடியதைக்  குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
சங்க காலத்தையும், இடைக்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெண் கல்வியின் சதவீதத்தில் பெரும்பான்மை உடையது தற்காலம் என்றாலும் மற்றொரு புறம் ஒரு சாராரிடம் ஒரு பகுதியினரிடம் விழிப்புணர்வு இல்லை எனலாம்.
 
பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றால் பெண்ணுரிமை சாத்தியம், அதற்குப் பெண் எல்லாமாக மாற வேண்டும். அதே போல்  பெண் ‘பேதை’ மென்மையானவள் என்று சில வேளைகளில்தான் ஈடுபட முடியும் என்ற எண்ணங்களை மாற்ற வேண்டும்.
 
பெண் முன்னேற்றத்திற்கு சமூகம் தடையாக இல்லாமல் அவர்கள் வளர்ச்சியை பெருமையோடு வரவேற்க  வேண்டும்.‘பெண்ணியம்’ என்பது ஆண்களை எதிர்ப்பதும், வீட்டு வேலை செய்யாமல் இருப்பதும், ஆண்களை விட  மேலோங்கி இருப்பதும், என்று எப்படி, எப்படியோ புரிந்துகொள்கிறார்கள்.
 
மகளிரைத் தமது தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், மகளாகவும், உறவுப்பெண் எனக் கொண்டிருக்கும் ஆண் வழி  சமுதாய ஆண்கள் தமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமான இப்பலினத்தை உரிய முறை நடத்துகின்றோமா என  சிந்திக்க கிடைக்கும் நாள் இது.
 
ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று ஏளனமாக கேட்கும் ஆண் வர்கத்திற்க்கு, பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து வன்முறைகளையும் சாட்சியாக நிறுத்தலாம். பெண் சிசு கொலையில் தொடங்கி, பெண்ணிற்கு  எதிரான பாலியல் கொடுமைகள், சிறுமிகள் மீதான வன்மை, வரதக்ஷணை கொடுமை, ஆசிட் வீச்சு, என்று சொல்லி கொண்டே  போகலாம்...அதனை கொடுமையும் பாலியல் சார்ந்தே நிகழ்த்தப்படுகிறது. 
 
சமீப காலமாக பெண்களுக்கான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. கடந்த சில வருடங்களாக சாதனை பட்டியலிலிருக்கும் பெண்களை விட, சமூக மிருகங்களால் சாக்கடைக்குள் தள்ளப்பட்ட பெண்களின் பட்டியலே அதிகம். நிர்பயா சம்பவத்தை கருப்பு தினமாக அறிவித்த அரசு, தர்மபுரி சம்பவத்தை சற்றும் தலைநிமிர்ந்து கூட பார்க்க வில்லை. இந்த பாரபட்சத்திற்கு காரணம் பொருளாதாரமாக கூட இருக்கலாம். காரணம் எதுவாயினும், பாதிப்புக்குள்ளான பெண்கள் போல், நம்மை சுற்றி அக்கா, தங்கை, தோழி என அனைத்து உறவுகளும் அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை நம்மால் மறுக்கவோ, மறைக்கவோ  முடியாது.