Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விநாயகரை வழிபாட்டில் அர்ச்சிக்க உகந்த எருக்கம் பூ!!

Widgets Magazine

நம் வீட்டில் எந்த சுபகாரியத்தினை ஆரம்பித்தாலும் முதலில் விநாயகரை வணங்கிதான் தொடங்குவோம். எல்லா  தெய்வங்களையும் பூஜை செய்து பலன் பெற முதலில் கணபதியைத்தான் வழிபடுவது வழக்கம். எல்லா யாகங்களிலும் முதலில் விநாயகருக்குத்தான் முதல் மரியாதை. விநாயகருக்கு உகந்தது எருக்கம் பூ.

 
எருக்கன் செடிகளில் பல வகைகள் உண்டு. எருக்கம் பூ செடிகள் அனைத்தின் பாகங்களும் ஏதேனும் மருத்துவ பயன்பாடு  நிச்சயம் உள்ளது. மருத்துவ பயன்கள் மட்டுமின்றி இறை வழிபாட்டிற்கும் சிறந்த மலராக எருக்கன் பூ திகழ்கின்றது. “தெய்வீக மூலிகை” பெருமையுடன் விளங்கும் எருக்க பூவில் ஒன்பது வகைகள் உள்ளனவாம். அதில் நமது கண்ணில் அதிகம் படுபவை  கத்தரிபூ நிற எருக்கம் செடிதான். அதற்கடுத்து பிரபலமான வெள்ளெருக்கு எனப்படும் வெள்ளை நிற பூ மலரும் எருக்கஞ் செடி, இவையிரண்டும் அதிகமாக பயன்படுகிறது.
 
விநாயகர் வழிபாட்டில் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர். காலையில் வெள்ளெருக்கம் பூவை கொண்டு பூஜை செய்தால் நல்ல பலனை  பெறலாம்.
 
“அர்க்க புஷ்பம்” என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் எருக்கம் பூ விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர். சூரியனுக்கு  “அர்க்கன்” என்று பெயருண்டு. சூரியனுக்கு உகந்த எருக்கம் பூவை விநாயகருக்கு அணிவித்து வணங்கும்போது விக்னங்கள் நீங்குவதுடன் சூரியனின் அருளால் ஆத்ம பலமும், ஆரோக்கியமும் உண்டாகும்.
 
அனைவரும் எனிதாய் வணங்கும் விநாயகரை சாதாரணமாய் பூத்து கிடக்கும் எருக்கம் மலரில் வழிபட்டாலோ அனைத்து  அருளும் வழங்குவார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிள்ளையார் சதுர்த்தி வழிபாடு; மோதகம் மற்றும் கரும்பு படைக்கப்படுவதின் தத்துவங்கள்!

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் ...

news

விநாயகருக்கு முன் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா?

அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். ...

news

எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கும் சக்தி கொண்ட உப்பு!!

யாருமே தங்களை சுற்றியும், தாம் வசிக்கும் இடத்திலும் கெட்டது மற்றும் எதிர்மறை சக்தி இருக்க ...

news

சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது? எதனால் அவ்வாறு தோன்றுகிறது...!

சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். ...

Widgets Magazine Widgets Magazine