1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Murugan
Last Modified: புதன், 25 மே 2016 (21:25 IST)

க‌ட்டிட‌த்‌தி‌ல் படி‌க்க‌ட்டுக‌ள் வர‌க்கூடாத இட‌ங்க‌ள் - வா‌ஸ்து

ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கப்படும் போது அதில் பல தவறுகளை நாம் செய்து விடுவோம். இதனால்தான் பல பெரிய தவறான விளைவுகள் நமக்கு ஏற்படுகின்றது என்பதில் எவருக்கும் விழிப்புணர்வு இல்லை. 


 

 
பொதுவாக படிக்கட்டு அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
 
ஒரு கட்டடத்தின் வடகிழக்கு பகுதியின் உள்மூலை மற்றும் வெளிமூலையில் படிக்கட்டு கட்டாயம் வரக்கூடாது.
 
ஒரு கட்டடத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியின் உள்மூலையில் படிக்கட்டு வரக்கூடாது.
 
ஒரு கட்டடத்தின் கிழக்கு, வடக்கு உட்சுவர் சார்ந்து படிக்கட்டு வரக்கூடாது.
 
ஒரு கட்டடத்தின் வெளி‌ப்புறத்தில் போடப்படும் படிக்கட்டினை மூடியவாறு அமைக்ககூடாது.
 
ஒரு கட்டடத்தின் வெளி‌ப்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டினை தூண்கள்(Pillars) துணைக் கொண்டு கட்டாயம் அமைக்ககூடாது.
 
ஒரு கட்டடத்தின் வெளிப்புறத்தில் போடப்படும் படிக்கட்டின் கீழ் எந்த வித அறையும் வரக்கூடாது.
 
மேலும் ஒரு கட்டடத்தின் வெளிப்புறத்தில் போடப்படும் படிகட்டினை மதில் சுவருடன் ஒட்டியவாறு போடக்கூடாது.