1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

வீட்டின் 4 மூலைகளில் இருக்கவேண்டிய இருக்கக்கூடாத பொருட்கள் என்ன...?

வாஸ்து முறையில் அமைந்த வீட்டில்தான் அமைதி, செல்வம் எல்லாம் பொங்கி வழியும். நான்கு திசைகள்: வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு. நான்கு மூலைகள்: வடகிழக்கு மூலை, தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை.
வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய மூலை / சனி மூலை). தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம்  தென்கிழக்கு மூலையாகும் (அக்னி மூலை). தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் (நைருதி மூலை/ கன்னி மூலை)  மற்றும் வடக்கும் மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்குமூலையாகும் (வாயு மூலை).
 
இவ்வாறு திசைகளையும், மூலைகளையும் அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் நல்முறையில் ஒரு வீடோ/ தொழில் நிறுவனமோ கட்டும்பொழுது மனிதனின் வாழ்வு தடுமாற்றமோ, தடமாற்றமோ இல்லாமல் அமையும்.
 
திசை காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்து கொள்ளவேண்டும். வீட்டின் முதன்மை வாசல் வழியாகத்தான் நேர்மறை சக்திகள்  வீட்டினுள் நுழையும். ஆகவே நாம் வாங்கும் வீட்டி வாசம் கதவு தென்மேற்கு திசையை நோக்கி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
தென்மேற்கு திசைதான் தீய சக்திகளில் நுழைவு வாயில். அது கஷ்டத்தையும், துரதிஷ்டத்தத்தையும் தரும். எனவே வீட்டின் நுழைவு வாயில்  இந்த திசையில் இருந்தால், இரண்டு அனுமன் பதித்த டைல்ஸ் கல்லை பதிக்கவேண்டும். பிறகு நல்லவொரு மாற்றம் தெரியும்.
 
பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திட வேண்டும். வணங்கும்போது கிழக்கு திசையை நோக்கி வணங்கவேண்டும்.
 
ஈசான்ய மூலையின் வழியாக அனைத்து செளபாக்கியங்களும் வருகின்றன. எனவே இந்த மூலையை நீங்கள் சுத்தமாக வைக்கவேண்டும்.  ஈசான்ய மூலையில் பூஜை அறை, படுக்கையறை, முதியவர்களின் படுக்கையறை, படிக்கும் அறை போன்றவை அமைக்கலாம்.
 
ஈசான்ய மூலையில் வெயிட்டான பொருட்களை வைக்கக் கூடாது. அம்மி ஆட்டுகல், பழைய பொருட்கள், பீரோ போன்றவை வைக்கவே  கூடாது. மேலும் குளியல் அறை, செப்டிக் டேங்க் போன்றவை கண்டிப்பாக வைக்கக் கூடாது. ஈசான்ய மூலையில் கிணறு போன்றவை  அமைக்கலாம்.
 
குபேர மூலை அதாவது வடக்கு மூலையாகும். தென்மேற்கு மூலையில் பீரோ போன்றவை வைக்கலாம். அக்னி மூலை என்பது தென்கிழக்கு மூலை. இங்கு சமையல் கூடம் அமைக்கவேண்டும். வாயு மூலையில் அதாவது வடமேற்கு மூலையில் சமையல் அறை அமைக்கலாம்.
 
நாம் தூங்குபோது நமது தலை தெற்கு அல்லது மேற்கு நோக்கித்தான் இருக்கவேண்டும். ஆனால் கண்டிப்பாக வடகிழக்கு திசையில்  தூங்கக்கூடாது. படுக்கை அறையில் தையல் மிஷின்களை வைத்திருந்தால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வரும். தண்ணீர்  அல்லது நீர் ஊற்றுகளின் படங்களை மாட்டக்கூடாது. இவை பாதிப்பை ஏற்படுத்தும்
 
வீட்டின் மையப்பகுதி திறந்தவெளியாகவும். குப்பையாகவும் இருக்கக் கூடாது. இங்கு ஜீரோ வாட்ஸ் நீல நிறம் கொண்ட பல்பை 24 மணி நேரமும் எரியவிடுவது நல்லது. முக்கியமாக அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவர்களுக்கு வண்ணங்களை பூசக் கூடாது. அதிலும்  சிவப்பு, செந்நிற நிறங்களை பூசுவதால், இவை நோய்களை உண்டாக்கும். வீட்டை வாரத்திற்கு இரண்டு நாள்களில் கல் உப்பை கொண்டு  துடைத்துவிடுவதால் எதிர்மறை சக்திகளை போக்கும்.