Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாஸ்து என்றால் என்ன? அதை ஏன் கடைபிடிக்க வேண்டும்?

Widgets Magazine

இன்றைய காலத்தில்  நிறைய மனைகள் விற்பனைக்கு வருகிறது சிலர் அதை பெற்று வீடு எழுப்புகிறார்கள் சிலர் அதை சில  காலம் கழித்து விற்பனை செய்கிறார்கள், சிலர் விற்பனை செய்ய முடியாமலும் சிலர் வீடு எழுப்ப முடியாமலும் அரைகுறையாக விட்டு விடுகின்றனர். மனையை வாங்கும் பொழுது நன்றாக கவனித்து வாங்காமல் நம்முடைய பொருளையும், பணத்தையும் இழந்து நாம் சிரமப்பட கூடாது என்று சில தகவல்களை நூல்களில் பதித்து உள்ளார்கள் முன்னோர்கள்.

 
முதலில் அடிப்படை தகவல் தெரிந்து கொள்ள வேண்டும். மத்ஸ்ய புராணம் வாஸ்துவை பற்றி விவரிக்கிறது, வாஸ்து என்பது  ஒரு ஆண் தெய்வத்தின் பெயர் ஆகும்.
 
புராண கதை
 
சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் புரிந்து வெற்றி அடைந்தார். அப்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று  சேர்ந்து பூமியில் விழுந்தன. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது. அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக  இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்துக்கு பசி தீரவில்லை. அதனால்,  அந்த பூதம் சிவனை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தது. தவத்தை மெச்சிய சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்றார்  வழக்கம்போல். அதற்கு இந்த பூமி முழுவதையும் நான் எனது கண்காணிப்பின் வைத்து இருக்கவேண்டும் என்று கேட்டது. அழிக்கும் சக்தியும் எனக்கு வேண்டும் என்று கேட்டு பெற்றது.
 
இதை கவனித்த பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பூதத்தை குப்புற தள்ளிவிட்டனர். குப்புற விழுந்தவுடன், அனைவரும் அந்த பூதத்தின் மேலே உட்கார்ந்துகொண்டு அதை எழுந்திருக்கவிடாமல் செய்தனர். அந்த பூதம் எனக்கு பசிக்கிறது என்றது. அதற்க்கு பிரம்மா சொன்னார். பூமியில் பிராமணர்கள் செய்யும் வைவஸ்வத ஹோமத்தில் கொடுக்கும் பொருட்களை நீ உண்டுகொள். மேலும், பூமியில் வீடு கட்டுபவர்கள், உனக்கு ஹோமம் செய்வார்கள், வாஸ்து பூஜை செய்வார்கள். அதை நீ சாப்பிட்டுக்கொள் என்றனர்.
 
பிரம்மாவும் மற்றவர்களும் அவனுக்கு வாஸ்து புருஷன் என பெயரிட்டனர். இதை போல மனிதனின் கால் அடியை வைத்து  தான் அன்று மனை கணிதம் சொல்ல பட்டது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாஸ்துப்படி வீட்டு வாசலை அமைப்பது எப்படி?

மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு திசையை நோக்கி தலைவாசல் வைத்து வீடு கட்டுவது சிறந்த ...

news

ஒரு மனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்!

ஒரு மனையை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை வைத்து ...

news

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்

2017ஆ‌ம் ஆ‌ண்டு மார்ச் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் ...

news

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற ...

Widgets Magazine Widgets Magazine