Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வீடுகளில் வாஸ்து தொடர்பான பொருட்களை வைக்க வேண்டுமா?

வாஸ்து என்பது பிற்காலத்தில் தோன்றியதுதான். முற்காலத்தில் வாஸ்து தொடர்பான பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை. நமது மூதாதையர்கள் மனையை கட்டும் போதே சிறப்பாக அமைத்தனர். 

 
வீட்டின் நடுவில் முற்றம் இருப்பது பழங்காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளது. அது வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்டது என்று கூறுவதுதான் சரியாக இருக்க முடியும். ஏனென்றால் பஞ்ச பூதங்களும் வீட்டிற்குள் வரும் வண்ணம் அந்த முற்றம் அமைக்கப்படும்.
 
காற்று, நீர் (மழை), வெப்பம் (சூரிய ஒளி), ஆகாயம், நிலம் (முற்றத்திற்கு நடுவில் துளசிச் செடி வைக்க பயன்படும் சிறு இடத்தில் உள்ள மண்) ஆகியவை வீட்டில் இருக்கும் வகையில் கட்டி விட்டால், வாஸ்து பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமே இருக்காது.
 
மேலும், அதுபோன்ற வீட்டை அமைத்து, தென்மேற்கு பகுதியில் (நைருதி) பணம், பீரோ உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொண்டாலே அனைத்து விடயங்களும் சிறப்பாக இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :