திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வாஸ்து தீமைகளின் பாதிப்புகளை குறைத்து நன்மைகளை ஏற்படுத்துமா...?

வீட்டுக்கு அஸ்திவாரமும், வாசலும் எப்படி முக்கியமோ, அதேபோல் பஞ்சபூதங்கள் அமைப்பும் சரியானபடி அமைய வேண்டும். அப்படி அமைந்த வீடுகள் எனில் செல்வச் செழிப்பில் உயர்ந்து நிற்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

பஞ்சபூதங்களின் ஆட்சியை வீட்டிலும், தொழில் நிறுவனத்திலும் சரியாக அமைத்து கொடுப்பது வாஸ்து மட்டுமே. இந்த வாஸ்துவால் மிகுந்த நன்மைகள்  ஏற்படுகின்றன.
 
பரிபூரணமாக வாஸ்து பார்த்து கட்டப்பட் வீடுகளில் பேரமைதி தவழும். அங்கு வசிப்பவர்கள் முகங்கள் எப்போதும் புன்னகை தவழும் முகங்களாக காணப்படும். எவ்வளவு பெரிய பிரச்னைகளாக இருந்தாலும் இவர்களுக்கு எளிதாக நல்லவையாக மாறிவிடும். காரணம் அவர்களின் வீடுகளில் ஆட்சிப்புரியும் பஞ்சப்பூதங்களின்  செயல்பாடுதான். இதை சிறப்பாக செய்து கொடுத்தது வாஸ்துதான்.
 
இப்படிதான் தொழில் நிறுவனங்களில் உள்ள தடைகளை நீக்கி லாபம் பெற செய்வதில் வாஸ்துவின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. வாஸ்து பார்க்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் இன்று லாபகரமாக இயங்கி வருவதே இதற்கு நேரிடையான கண்கூடான சாட்சியாகும். வாஸ்து தீமைகளின் பாதிப்புகளை குறைத்து  நன்மைகளை ஏற்படுத்தி வாழ்வில் வளம் சேர்க்க உதவுகிறது.