1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

சமையல் அறையின் வாஸ்து பலன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

வீட்டைப் பொறுத்தவரை சமையல் அறை என்பது ஒரு மிக முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. சமையல் அறை தென்-கிழக்கு திசையில் இல்லை என்றால், அது குடும்பத்தினருக்கு எந்த விதமான தீங்கையும் நிச்சயமாக ஏற்படுத்துவதில்லை எனச் சொல்லப்படுவதுண்டு.

சமையல் செய்யும் பொழுது, வீட்டுப் பெண்மணி அல்லது சமையல்காரர் கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அதே போல ’அடுப்பு’ அது கேஸ் அடுப்பாக  இருந்தாலும் சரி, விறகு அடுப்பு அல்லது நிலக்கரி அடுப்பு அல்லது மின் அடுப்பாக இருந்தாலும், அது அமைக்கப்பட்டிருக்கும் திசை முக்கியமானது என  நம்பப்படுகிறது. 
 
கிழக்கு திசையில் சமையலறை அமைவதால் வம்ச விருத்தி, குடும்ப தலைவி உடல் நலம் பாதிக்கப்படும். தென் கிழக்கு திசையில் அமைந்தால் உணவின் சுவை  அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் எந்த தடையும் இல்லாமல் இனிதே நடக்கும்.
 
தெற்கு பகுதியில் அமைந்தால் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் தொல்லை அதிகமாகும். தென் மேற்கில் சமையலறை அமைந்தால் தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும்.
 
மேற்கு மற்றும் வடமேற்கில் சமையலறை அமைந்தால் நிம்மதியின்மை, சண்டைகள், வீண் செலவுகள் ஏற்படும். வடக்கில் சமையலறை அமைந்தால் குடும்பத்தில் உள்ள நபர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரலாம்.
 
நாம் மேலே சொன்னவாறு தான் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் தீய பலன்கள் தான் நடக்கும். சாப்பிடும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி  சாப்பிட்டால் உடல் நலம் சீராக இருக்கும். நோய்கள் வராது.