வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

சமையல் அறையை வீட்டின் தென்கிழக்கு மூலையில் அமைப்பது சரியா...?

சமையல் அறையை வீட்டில் அக்னி மூலையான தென் கிழக்கு மூலையில் தான் வைக்க வேண்டும். மாறாக வட கிழக்கு பகுதியில் அமைத்தால் செல்வத்தை எரிப்பதற்கு சமம் ஆகும். இப்படி இல்லையென்றால் வறுமை அதிகமாகும். 

வீட்டில் சமையல் செய்பவர்கள் கிழக்கே பார்த்தவாறு நிற்கும் படி இருக்க வேண்டும். சமையலறையில் சமைக்கும் போது கிழக்கு திசையை நோக்கியவாறு  சமைப்பது நல்லது.
 
சமையலறையின் வாசல் உச்ச பகுதியில் அமைக்கப்பட வேண்டும். மேலும் தென்கிழக்கு சமையலறையில் கிழக்கு சுவரில் வடக்கு ஒட்டி ஜன்னல்  அமைக்கவேண்டும்.
 
பாத்திரங்கள் கழுவும் இடத்தை சமையலறையின் வடகிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைக்கவேண்டும். பல்பொருள் வைத்துக்கொள்ள அலமாறிகளை மேற்கு அல்லது தெற்கு சுவர்களில் அமைத்துக்கொள்ளலாம். 
 
தென்கிழக்கு சமையலறையில் புகைவிசிறியை தெற்கு சுவரில் அமைத்துக் கொள்ளவேண்டும். சமையலறையில் அமைக்கப்படும் பின் வாசல் அதன் உச்சதில் இருக்க வேண்டும்.
 
சமையலறைக்கும், உணவு பரிமாறும் அறைக்கும் நடுவில் ஆர்ச் போன்று வளைவான துவாரங்கள் இருக்ககூடாது.