திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (18:36 IST)

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாஸ்துப்படி வீட்டு வாசலை அமைப்பது எப்படி?

மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு திசையை நோக்கி தலைவாசல் வைத்து வீடு கட்டுவது சிறந்த பலனை தரும்.  அப்படி வாசல் அமைக்கும்போது தென்மேற்கு பகுதியில் அமைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  

 
* கும்பம், மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கும் மேற்கு திசை பொறுத்தமான திசையாகும். அவர்களும் வீட்டின் தலை வாசலை மேற்கு திசையில் அமைப்பது வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகளை பெற்று தரும்.  
 
*சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் வீட்டின் வாசலை கிழக்கு பக்கம் வைக்கலாம். அப்படி வீட்டின் முகப்பு அமைந்தால் செல்வம்  நிலைத்திருக்கும். பண பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய நிலை வராமல் செல்வம் குறைபடாமல் கைவசம் இருக்கும்  வாய்ப்புகள் அதிகம். வீட்டின் வாசலை கிழக்கு திசை பார்த்து அமைக்க முடியாத சூழலில் மேற்கு திசையில் வாசல்  அமைக்கலாம்.  
 
* இதேபோல் துலாம், கன்னி ராசியில் பிறந்தவர்களும் கிழக்கு திசை நோக்கி வாசலை நிறுவலாம். அப்படி அமைக்கும்  பட்சத்தில் வீட்டில் செல்வம் குறைவில்லாமல் இருக்கும்.   
 
* தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு திசை பலன்களை தருவதாக அமையும். இந்த திசை நோக்கி வீட்டு வாசலை அமைப்பதால் நன்மைகள் கிட்டும். எனினும் வாசலை அமைக்கும்போது அது தென்மேற்கு திசையில் அதிக அளவு ஆக்கிரமித்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். 
 
* மகரம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களும் தெற்கு திசை பார்த்து வீட்டு வாசலை அமைக்கலாம். அப்படி அமைப்பது  செல்வாக்கையும், மதிப்பையும் பெற்றுத்தரும்.  
 
* மிதுனம், ரிஷபம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு வடக்கு பார்த்த திசை பலன் தருவதாக அமையும். அந்த திசையில் வீட்டு  வாசலை அமைக்கலாம். 
 
* கடகம் ராசிக்காரர்களும் வடக்கு திசை சாதகமான திசையாகும். வீட்டு வாசலை அந்த திசை பார்த்து வைக்கலாம்.