இசைஞானி இளையராஜாவுடன் ’காதலர் தினத்தை’ கொண்டாடுங்கள்!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (05:04 IST)
நம் செவிகளையும், மனதையும் இனிமையாக்க எத்தனையோ காதல் பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்கள் நமக்கு அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார்.

 

ஆனால், அதே சமயத்தில் காதல் காட்சிகளில் வரும் பின்னணி இசையை தனியாக கேட்கும் வாய்ப்பு குறைவாக இருந்திருக்கிறது.

அந்தக் குறையைப் போக்குவதற்காக இளையராஜா இசையமைத்த திரைப்படங்களின் பின்னணி இசையைத் தொடர்ந்து தொகுத்து வரும் நண்பர் நவீன் அவர்கள், சில திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளின் பின்னணி இசையை தொகுத்து வழங்கியுள்ளார்.

1985ஆம் ஆண்டு வெளிவந்த ஆண்பாவம் திரைப்படம் தொடங்கி அலைகள் ஓய்வதில்லை, ஆனந்த ராகம், அரண்மனைக் கிளி, கோபுர வாசலிலே, குணா, இதயம், ஜானி, கோழிகூவுது, மகாநதி, மூடுபனி, மூன்றாம் பிறை, மவுன ராகம் தொடங்கி 2004ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி, விஸ்வதுளசி வரையில் 50 திரைப்படங்களின் காதல் இசையை தொகுத்துள்ளார்.

இனிய காதலர் தினத்தன்று ரசிகர்கள் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையோடு காதலை கொண்டாடுங்கள்!

இசைத் தொகுப்பு கீழே:


webdunia

இதில் மேலும் படிக்கவும் :