சுவையான சாம்பார் செய்ய சில அற்புத டிப்ஸ்...!
சாம்பாரில் முள்ளங்கியை அப்படியே போடாமல் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
* சிறிதளவு பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து, சாம்பார் பொடியுடன் சேர்த்தால், சாம்பார் சூப்பராக இருக்கும்.
* வெந்தயக் குழம்புக்கு வெந்தயத்தைத் தாளிக்காமல், வெறும் வாணலியில் நன்றாக வறுத்துப் பொடி செய்து தூவினால், குழம்பு மணமாக இருக்கும்.
* வெங்காய சாம்பார் செய்யும்போது, பெரிய வெங்காயம் வைத்துச் செய்யவும். சின்ன வெங்காயம் 7-8 வதக்கி சாம்பாருக்கு அரைக்கும் பொருட்களுடன் அரைத்து சாம்பாரில் கொட்டவும். மணம் வீட்டைத் தூக்கும்.
* சாம்பாரில் காய்களுடன் ஒரு பெரிய நெல்லிக்காயையும் கட் பண்ணிப் போட்டு சமைத்துப் பாருங்கள். கல்யாண சாம்பாரையும் மிஞ்சிவிடும் சுவை. சத்தானதும் கூட.
* துவரம் பருப்புடன் வெந்தயத்தை அரைமணி நேரம் ஊறிய பிறகு வேகவிடவும். வழக்கமான புளி ஊறவைத்து சாம்பார் செய்யவும். மற்ற சாம்பாரைவிட இதற்கு ருசி அதிகம்.