1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (16:16 IST)

19 வயது பெண்ணை சாலையில் நிர்வாணமாக்கி அடி உதை: அதிர வைக்கும் காரணம்

போஜ்பூர் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண்ணை சாலையில் நிர்வாணமாக்கி 15 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்தது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 
 
போஜ்பூர் மாவட்டத்தில், பிஹியா நகரத்தின் ரயில்வே இருப்புப் பாதையில், 19 வயதான பிம்லேஷ் சாவ் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக்கொன்றுள்ளனர். 
 
இது குறித்து அந்த இளைஞரின் சொந்த கிராம மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இதர்கு ரயில்வே இருப்புப்பாதையை ஒட்டி இருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கருதினர். 
 
இதையடுத்து, சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள 19 வயது இளம்பெண்ணை அந்த கிராம மக்கள் இழுத்து வந்து, நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர். இந்நிலையில் போலீஸாருக்கு தகவல் கொடுத்த், அந்த 15 பேர் கொண்ட கும்பலிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். 
 
போலீஸார் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கையும் விசாரித்து வருகின்றனர்.