வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (09:20 IST)

அதிமுக வலையில் வீழ்ந்த தங்கத்தமிழ்ச்செல்வன்? காலியாகும் அமமுக!

தினகரனின் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி விலகியதால் அக்கட்சியே ஆட்டம் கண்டுகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இன்னும் சிலரை திமுகவுக்கு இழுக்க உள்குத்து வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அதிமுகவும் சுதாரித்து அமமுகவினர்களை இழுக்க தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

அமமுகவில் தினகரனை அடுத்து செல்வாக்குடன் இருப்பவர் தங்கத்தமிழ்ச்செலவன் ஒருவரே. அவரை இழுத்துவிட்டால் அமமுக காலி என்ற வகையில் அவருக்கு அதிமுக வலை விரித்திருப்பதாகவும், இந்த வலையில் கிட்டத்தட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் வீழ்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தங்கத்தமிழ்ச்செலவன் அதிமுகவிற்கு வந்தால் அவரது தொகுதியிலேயே அவரை நிற்க வைத்து, ஜெயித்தால் மந்திரி பதவி என்ற ஆசையும் காட்டப்படுவதாகவும், அதிமுகவின் மூத்த அமைச்சர் ஒருவர் தங்கத்தமிழ்ச்செலவனிடம் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தங்கத்தமிழ்ச்செலவன் அணி மாறினால் தினகரனுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.