ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (22:30 IST)

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரா?

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் மீது மேலிடத்திற்கு புகார்கள் மேல் புகார்கள் அடுக்கி கொண்டே செல்வதால் விரைவில் தலைமை பதவியில் மாற்றம் இருக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இந்த பதவிக்கு ப.,சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு ஆகிய மூவர் பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னரே தமிழக காங்கிரஸ் தலைவர் குறித்த முடிவை எடுக்கவுள்ளதாக ராகுல்காந்தி கூறிவிட்டதால் தற்போதைக்கு திருநாவுக்கரசர் நிம்மதி அடைந்துள்ளாராம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி என்பது உறுதியாகிவிட்டால் ஈவிகேஎஸ் தலைவராக வாய்ப்பு அதிகம் என்றும், திமுக கூட்டணி இல்லை என்றால் குஷ்பு தலைவராக வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.