வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (08:13 IST)

மு.க.ஸ்டாலின் பேச்சால் உருவாகும் மூன்றாவது அணி

ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் மூன்று பெரிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர முடிவு செய்திருந்தது. ஆனால் கருணாநிதி சிலைதிறப்பு விழாவில் 'ராகுல்தான் பிரதமர்' என மு.க.ஸ்டாலின் கூறியதால் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் கூறியதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல தலைவர்கள் ஸ்டாலின் மீது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மூன்றாவது அணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக மூன்றாம் அணியை உருவாக்க 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆதரவு 3 வது அணிக்குக் ஆதரவு கோரினார். மேலும் அவர், நாளை மேற்குவங்க முதல்வர் மம்தாவையும் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக ஒரு வலிமையான அணி உருவாகி வந்த நிலையில் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்தது போல் ஸ்டாலின் பேச்சால் தற்போது 3வது உருவாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.