செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (10:29 IST)

மெரீனாவில் மீண்டும் சிவாஜி சிலை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திமுக ஆட்சியில் சென்னை மெரீனாவில் வெண்கல சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை அப்போதைய முதல்வரும் சிவாஜியும் நெருங்கிய நண்பருமான மு.கருணாநிதி திறந்து வைத்தார்.

ஆனால் இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதை அடுத்து அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் சிவாஜி குடும்பத்தினர்களும் ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'மெரினாவில் மீண்டும் சிவாஜி சிலை வைக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் அரசு பரிசீலிக்கும்' என்று கூறினார். எனவே மெரீனாவில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் ஒரு இடத்தை தேர்வு செய்து சிவாஜி ரசிகர்கள் அரசை அணுகினால் மீண்டும் மெரீனாவில் சிவாஜி சிலை வைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது