வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (13:31 IST)

மன்றத்திற்கு எதிராக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: ரஜினி மக்கள் மன்றம்

நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் அவரது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

 
அந்நிலையில், நேற்று ரஜினியின் மக்கள் மன்ற கட்சியின் திண்டுக்கல் செயலாளர் தம்புராஜை, கடந்த 22- ஆம் தேதி கட்சியின் கட்டுபாட்டிற்கு முரண்பாடாக செயல்பட்டதால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கினர். இதனால் திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள். ஒன்றிய பொறுப்பாளர்கள் என 147-பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்தனர்.
 
இது குறித்து ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
 
 
”ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் செயலாளர் பொறுப்பு திரு. தம்புராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் கட்சி கூட்டத்திற்கு தனது சுய விருப்பம், வெறுப்புக்கு இடம் கொடுத்து, தனக்கு விருப்பமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தார்.
 
இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, அவர் சரியான பதிலளிக்கவில்லை. அது தவிர, சென்னையில் நடைபெற்ற ஆய்வுப்பணி  கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரான அவர் நேரில் வராமல் வேறொருவரை அனுப்பி வைத்தார்.
 
அவர் செய்த தவறுகள் தலைமைக்கு விரோதமானது என்றாலும், ஒரு தாயுள்ளத்தோடு நம் அன்புத்த்லைவர் அவரைமாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து  தற்காலிமாக  நீக்கவும் வேறு யாரையும் அந்த பொறுப்பில் நியமிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.
 
ரஜினி மக்கள் மன்றம் என்பது பொதுமக்களுக்கு சேவை புரிவதற்காக துவங்கப்பட்டது. இங்கு மக்கள் யார் வேண்டுமானலும் பொறுப்புகளில் நியமிக்கப்படலாம். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் மன்றத்தின் கட்டுபாட்டிற்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும்” என கூறப்பட்டுள்ளது.