1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (20:13 IST)

நல்ல சக்தியா, தீய சக்தியா? கமல்ஹாசனுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால்

இன்று காலை முதல் கமல்ஹாசனுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் சொற்போர் நடந்து வருகிறது. கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என்றும் அது வளர்ந்தால் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் ஆபத்து என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 'கரு கலைக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார். அது பெண்களுக்கு பிடிக்காது.  ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி என பதிலடி கொடுத்தார்.

கமல்ஹாசனின் இந்த பதிலடிக்கு மீண்டும் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று நல்ல சக்தியாக உள்ளதால்தான் மக்கள் தொடர்ந்து எனக்கு வாக்களிக்கிறார்கள். ஒருமுறையாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, தான் நல்ல சக்தியா, தீய சக்தியா என்பதை கமல்ஹாசன் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார். அமைச்சரின் இந்த சவாலை கமல்ஹாசன் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்