1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (20:14 IST)

மெர்சல் படம் படைத்த புதிய சாதனை என்ன தெரியுமா?

விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் இந்திய அளவில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
 
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது.  
 
இந்த படம் துவங்கியது முதலே மெர்சல்லுக்கான ட்விட்டர் எமோஜி தொடங்கப்பட்டது. ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்தது. மேலும், டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் Views தொட்டு சாதனை படைத்தது. இது போன்ற பல சாதனைகளை இப்படம் படைத்தது.
 
இந்நிலையில், இப்படம் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அது என்னவென்றால் கடந்த ஆண்டு டுவிட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் மெர்சல் முதல் இடத்தை பிடித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.