வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (11:30 IST)

" இனிமேல் ஒழுங்கா நடந்துக்கணும்" பிரியங்கா சோப்ராவை கண்டித்த வருங்கால மாமியார்

திருமணத்துக்கு முன் தனது நண்பர்களுடன் பேச்சலரட் பார்ட்டிக்கு தயாராகி வரும் பிரியங்கா சோப்ராவிடம், 'ஒழுங்கா நடந்துக்கணும்' என அவரது வருங்கால மாமியார் டெனிஸ் மில்லர்-ஜோனஸ் செல்ல அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தமிழில் விஜய்யுடன் ’தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டில் மாபெரும் வெற்றியை பதித்து விட்டு , சில காலம் ஹாலிவுட்டில் தலைக்காட்டவும் சென்றார். ஹாலிவுர் சீரியஸ், நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனஸுக்கும் காதல் மலர்ந்து
அடுத்த  மாதம் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
 
இந்நிலையில், கடந்த வாரம், பிரியங்காவுக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிசுகள் வழங்கும் பிரைடல் ஷவர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நண்பர்களுடன் பேச்சலரட் பார்ட்டிக்கு பிரியங்கா தயாராகி வந்தார். நேற்று, தனது சமூக வலைத்தளத்தில், பேச்சலர் வைப்ஸ் என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். 
 
பிரியங்காவின் புகைப்படத்திற்கு சமூக வலைத்தளத்தில் கமெண்ட் கொடுத்த அவரது வருங்கால மாமியார், டெனிஸ் மில்லர்-ஜோனஸ், 'ஒழுங்கா நடந்துக்கணும்' (Be Good) என செல்லமாக அதட்டியுள்ளார்.