1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (08:05 IST)

திமுக தலைவர் ஸ்டாலின்: தேசிய அளவில் டுவிட்டரில் டிரெண்ட்

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் பெயர்கள் முறைப்படி பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்களால் அறிவிக்கப்படவுள்ளது.
 
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் இன்று காலை முதல் டுவிட்டரில் திமுக குறித்த டுவீட்டுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக #திமுகதலைவர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. 
 
ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் கட்சியின் தலைவர் மாறுவதால் இதனை திமுகவினர்கள் ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயம் முன் இப்போதே தொண்டர்கள் குவிய தொடங்கிவிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஒரு மிகப்பெரிய இயக்கத்திற்கு தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு திமுகவினர் மட்டுமின்றி கிட்டத்தட்ட அனைத்து கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது