Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காவிரி விவகாரம் - மனித சங்கிலி போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் முடிவு

stalin
Last Modified செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (08:46 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது கடந்த 9 ந் தேதி விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
court
இந்ந்நிலையில் திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம், காவிரி உரிமை மீட்பு நடைபயணம் என அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
இதனையடுத்து திமுக சார்பில் சென்னை  அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த பிரதமர் மோடியை  திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் 23 ஆம் தேதி தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக தோழமைக் கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :