திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : சனி, 8 செப்டம்பர் 2018 (13:34 IST)

திலீப்பை 2வது திருமணம் செய்த காவியா மாதவன் கர்ப்பம்!

விக்ரம் நடித்த ‘காசி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் நடிகை காவ்யா மாதவன் கர்ப்பமாக இருப்பதாக அவரது தெரிவித்து உள்ளனர்.


காசி படத்தில் அறிமுகமாகி, ‘என் மன வானில்’ ‘சாதுமிரண்டா’ உள்ளிட்ட 70 படங்களில் நடித்தவர் காவியா மாதவன்.

இவர் குவைத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை 2009–ல் திருமணம் செய்தார். ஆனால்
2011–ல் விவாகரத்து செய்து கொண்டார்.

பின்னர் மலையாள நடிகர் திலீப்புடன் காதல் ஏற்பட்டது. இதனால் திலீப் தனது முதல் மனைவி மஞ்சுவாரியரை விவாகரத்து செய்து விட்டு காவ்யா மாதவனை 2016–ம் ஆண்டு 2–வது திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு மலையாள நடிகையை கடத்திய வழக்கில் திலீப் சிக்கி சிறைக்கு சென்றார். இதனால் மலையாள நடிகர் சங்கம் அவரை சங்கத்தில் இருந்து நீக்கியது. ஜாமீனில் வெளியே  மீண்டும் சங்கத்தில் சேர்க்க முயற்சி நடந்தது.

இந்த நிலையில் காவ்யா மாதவன் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் குடும்பத்தினர் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். திருமணத்துக்கு பிறகு காவ்யா மாதவன் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். திலீப்புக்கு முதல் மனைவி மூலம் மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.