1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 30 ஜூன் 2018 (09:48 IST)

கமல் வீட்டின் சுவரை தாண்டி குதித்த வாலிபர் கைது: திருட முயற்சியா?

நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் வீடு எந்த நேரமும் பிசியாக உள்ள ஆழ்வார்ப்பேட்டையில் உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயற்சித்த ஒரு வாலிபர் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவரது வீடு எப்போது பரபரப்புடன் உள்ளது. அவரது வீட்டின் முன் அவரது கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக கட்சி தொண்டர்கள் இருப்பது வழக்கம். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கமல்ஹாசனின் வீட்டின் சுவரேறி குதிக்க முயற்சித்தார். இதனை பார்த்த கமல் வீட்டின் பாதுகாவலர் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்
 
அந்த வாலிபர் கமல் வீட்டில் திருட முயற்சித்தாரா? அல்லது கமலை சந்திக்க வந்த ரசிகர்களில் ஒருவரா? என்று விசாரணை நடந்து வருகிறது. சுவரேறி குதித்த வாலிபரின் பெயர் சபரிநாதன் என்றும், அவர் திட்டக்குடியை சேர்ந்தவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.