வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 23 பிப்ரவரி 2019 (07:33 IST)

அதிமுக முக்கிய பிரமுகர் சாலை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் அதிமுகவினர்

விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக எம்.பி ராஜேந்திரன்  பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் அதிமுக எம்.பி.யாக பதவி வகித்தவர் ராஜேந்திரன்(62). ராஜேந்திரன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட பின்னர், இன்று அதிகாலை சொந்த வேலைக்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நடந்த எதிர்பாராத சாலை விபத்தில் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அதிமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.