வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (22:44 IST)

கன்னியாகுமரிக்கு தனி தேர்தல் அறிக்கை: பொன் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நேற்றே கசிந்துவிட்டாலும் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
 
வேட்பாளர் பட்டியல் வெளியிட்டவுடனே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன், பிரச்சார களத்திலும் இறங்கிவிட்டார். குறிப்பாக
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு என தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளது அந்த தொகுதி மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.
 
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மாநிலம் முழுவதும் ஜெயலலிதா அலை அடித்தபோதே அந்த அலையில் தப்பி, எம்பி ஆனவர் பொன் ராதாகிருஷ்ணன். இந்த தேர்தலில் எந்தவித அலையும் இல்லாத நிலையில் அவர் வெற்றி பெறுவது உறுதி என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இம்முறை அவர் மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் அவருக்கு கேபினட் மந்திரி பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறதாம்