1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 31 ஜூலை 2018 (16:54 IST)

நேற்று ஒருவர், இன்று 13 பேர்: காவேரி மருத்துவமனை அருகே பெருகும் பிக்பாக்கெட்

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை அருகே ஆயிரக்கணக்கில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் இந்த கூட்டத்தை பயன்படுத்தி நேற்று பிக்பாக்கெட் அடிக்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் இன்று அதே இடத்தில் பிக்பாகெட் அடிக்க முயன்ற 13 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே திமுக தொண்டர்களுடன் சமூக விரோதிகள் கலந்திருப்பதாக செய்திகள் வெளிவந்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
 
இதனையடுத்து அடுத்த இரண்டு நாட்களில் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. ஆனால் இன்று ராகுல்காந்தி காவேரி மருத்துவமனைக்கு வரவுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து மீண்டும் கூட்டம் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாகெட் அடிக்க முயற்சித்த 13 பேர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருசிலர் அந்த கூட்டத்தில் பிக்பாகெட் அடிப்பவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் விழிப்புடன் உள்ளனர்.