திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By கே.என்.வடிவேல்
Last Updated : சனி, 14 மே 2016 (10:52 IST)

ஆர்.ஆர்.கே.நகரில் ஜெயலலிதா வெல்வாரா? ஜூ.வீ. கருத்துகணிப்பு சொல்வது என்ன ?

ஆர்.ஆர்.கே.நகரில் ஜெயலலிதா வெல்வாரா? ஜூ.வீ. கருத்துகணிப்பு சொல்வது என்ன ?

சென்னை, ஆர்..கே.நகரில் தற்போதைய முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெல்வாரா என ஜூனியர் விகடன் கருத்துகணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. 
 

 
தமிழகத்திற்கு மே 16 ஆம் தேதி நடை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகம்  முழுக்க 234 தொகுதிகளில் ஜூனியர் விகடன் இதழ் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, சென்னை, ஆர்.நகரில் தற்போதைய முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெல்வாரா என்ற கேள்விக்கு, ஜூனியர் விகடன் கருத்துகணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. இதில், 49 சவீதம் ஆதரவு பெற்று, முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெறுகிறார். ஜெயலலிதாவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் சிம்லா முத்துச் சோழன் 34 சதவீத வாக்குகளையும், மக்கள் நலக் கூட்டணி சார்பில் நிற்கும் கல்வியாளர் வசந்திதேவி 10 சதவீத ஆதரவும், பாஜக வெறும் 3 சதவீத ஆதரவும் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் கடும் சோதகளை மீறி முதல்வர் ஜெயலலிதா வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.