தேர்தல் பிரசாரத்தின் போது திருநாவுக்கரசர் திடீரென மயக்கம்

தேர்தல் பிரசாரத்தின் போது திருநாவுக்கரசர் திடீரென மயக்கம்


K.N.Vadivel|
அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென மயக்கம் அடைந்தார்.
 
 
மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மதுரையில், அகில காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர். திமுக மற்றும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
 
இந்த நிலையில், மதுரையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து திருநாவுக்கரசர் செல்லூர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது, பி.பி.குளம் பகுதியில் பிரசாரம் செய்த போது,  திடீரென மயக்கமடைந்து, வேட்பாளர் மீது சாய்ந்தார். இதனால், உடனே அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநாவுக்கரசர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 


இதில் மேலும் படிக்கவும் :