விஜயகாந்தை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தேர்தல் தோல்வி குறித்து பேசியுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அனைவரின் மத்தியிலும் பெரியதாக பேசப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பெரும் தோல்வியை சந்தித்தது.
இதைத்தொடர்ந்து திருமாவளவன் அதிமுக-திமுகவிற்கு எதிராக தோன்றிய எங்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அல்லாதவர் தான் வக்களிக்கவில்லை என்றார்.
ஜி.கே.வாசன் மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மட்டுமே சட்டப்பேரவைக்கு செல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்றார்.
இந்நிலையில் தேமுதிக கட்சியின் அங்கிகாரம் பறிக்கபட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் மற்றும் தோல்வி குறித்து விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பேசியுள்ளனர்.