1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2016 (04:19 IST)

ஜகா வாங்கிய ஜோதிமணி

ஜகா வாங்கிய ஜோதிமணி

திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பாடுபடமாட்டேன் என ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரூரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் தலைமையில் நடைபெற்ற போது, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை , மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி இழிவாக பேசியது, கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவரக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது போன்ற செயல்பாடுகள் காரணமாக அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஜோதிமணி காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
மேலும், ராகுல் காந்தி பெயரை ஜோதிமணி மிஸ்யூஸ் செய்வதாக காங்கிரஸ் கட்சி ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில், அரவக்குறிச்சியில் நான் சுயேட்சையாக நிற்கப் போவதில்லை. திமுக வெற்றிக்கு பணி செய்யப்போவதில்லை என ஜகா வாங்கியுள்ளார்.
 
மேலும், கட்சிக்குள் இருந்து கொண்டே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்ப்பேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.