ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Updated : சனி, 21 மே 2016 (13:19 IST)

என்னால் திருமாவளவன் தோற்கவில்லை : சுயேட்சை வேட்பாளர் திருமாவளவன் பேட்டி

என்னால் திருமாவளவன் தோற்கவில்லை

காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை நிறுவனர் தொல். திருமாவளவன் தோல்வி அடைந்ததற்கு நான் காரணமில்லை என்று அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அந்த தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 48.363 ஒட்டுகள் பெற்றார். ஆனால் அவரை விட அதிமுக வேட்பாளர் 87 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
 
இந்நிலையில், அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட திருமாவளவன் என்பவவர் 289 வாக்குகள் பெற்றிருந்தார். வேண்டுமென்றே ஒரே பெயரில் மற்றொரு வேட்பாளரை நிறுத்தி, பெயர் குழப்பம் காரணமாகவே தொல். திருமாவளவன் பெற வேண்டிய ஓட்டுகளை, சுயேட்சை திருமாவளவன் பெற்று விட்டதாக கூறப்பட்டது. ஆனால், சுயேட்சை திருமா அதை மறுத்துள்ளார்.
 
அவர் கூறும்போது “தொல்.திருமாவளவன் தோற்றதற்கு நான் காரணமில்லை. அவருக்கு முன்பாகவே காட்டுமன்னார் கோவில் தொ குதியில் நான் பிரச்சாரத்தை துவங்கி விட்டேன். யாருடைய தூண்டுதலிலும் நான் போட்டியிடவில்லை. 
 
எனக்கு ஏராளமான கொலை மிரட்டல் வந்தது. அதனால், வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். ஒருவேளை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்” என்று கூறினார்.