வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 1 மே 2016 (10:18 IST)

2618 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு : நாளை வெளியாகிறது இறுதி பட்டியல்

சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் எராளமான மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் நாளை இறுதியல் பட்டியலலை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்.


 

 
மே மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு மொத்தம் 7 ஆயிரத்து 149 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. முக்கிய தலைவர்கள் உட்பட சுயேட்சைகளும் அதில் அடக்கம். 
 
இந்நிலையில், அந்த வேட்பு மனுக்களை சரி பார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இதில், ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் தலைவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
 
2 ஆயிரத்து 618 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
முக்கியமாக, மனுக்களில் கையெழுத்து இல்லாமல் இருப்பது, பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யாமல் இருப்பது, யாரும் முன் மொழியாமல் இருப்பது, உறுதிமொழி எடுக்காமல் இருப்பது, வைப்புத் தொகை செலுத்தாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மே 2ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம்.
 
அதற்கடுத்து, வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது. அந்த பட்டியல் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும்.