ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 21 மே 2016 (18:09 IST)

பாதியில் ஓட்டம் எடுத்த ஆண்டிக்கு அடித்த யோகம்

பாதியில் ஓட்டம் எடுத்த ஆண்டிக்கு அடித்த யோகம்

தோல்வி என கருதி பாதியிலே எஸ்கேப்பான நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
 

 
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில், திமுக சார்பில் ஆண்டி அம்பலமும், அதிமுக சார்பில் ஷாஜகானும் போட்டியிட்டனர்.
 
வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுக வேட்பாளர் ஷாஜகான் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்தார். இதனால், கடைசி நம்பிக்கை இழந்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் பாதியிலே ஓட்டம் எடுத்தார். 
 
இந்த நிலையில், ஆண்டி அம்பலம் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 
 
இதனால், வீட்டில் இருந்த ஆண்டி அம்பலம் மீண்டும் வந்து வெற்றிச்சான்றிதழை வாய்யெல்லாம் மகிழ்ச்சி சிரிப்போடு பெற்றுக் கொண்டார்.